அரியலூர் : விபத்துக்குள்ளான காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல்!
05:57 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் உள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Advertisement
காலை நேரத்தில் நடந்த கார் விபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காரில் யாரும் இல்லை என்பதால் விபத்தில் சிக்கிய காரை சோதனை செய்தனர். அதில் 500 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின.
Advertisement
Advertisement