அர்த்தநாரீச வர்மா புகழை போற்றி வணங்குவோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்!
அர்த்தநாரீச வர்மா புகழைப் போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், தமிழ் எழுத்தாளருமான அய்யா அர்த்தநாரீச வர்மா அவர்களின் நினைவு தினம் இன்று. தேசம் சுதந்திரம் அடைய வேண்டுமென்பதில் அதீத செயல்பாடுடன் இயங்கிய அய்யா, சுப்ரமணிய பாரதியார் மீது கொண்ட ஈர்ப்பால் ‘வீரபாரதி’ என்ற பத்திரிகை நடத்தினார்.
அதன் மூலம், தமிழக இளைஞர்களிடத்தில் சுதந்திர உணர்வை மிக தீர்க்கமாக கொண்டு சேர்த்தார். தேச விடுதலைக்கு தன்னையே அர்ப்பணித்து, தியாகத் தொண்டாற்றிய அய்யா அர்த்தநாரீச வர்மா அவர்களின் நினைவு தினத்தில் பெருமையுடன் அவரை நினைவு கூர்வோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஐயா அர்த்தநாரீச வர்மா அவர்கள் நினைவு தினம் இன்று.
மகாகவி பாரதியாரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு, இளைஞர்களை ஒன்று திரட்டி சுதந்திரப் போராட்டப் பயிற்சி அளித்தவர்.
பத்திரிகைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் பொதுமக்களிடையே சுதந்திர தாகத்தை உருவாக்கியவர். தேச விடுதலைக்காகப் பல தியாகங்கள் செய்து, நாட்டுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஐயா அர்த்தநாரீச வர்மா அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்,