அலங்காநல்லூர் : குடிநீர் கேட்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!
05:26 PM Apr 01, 2025 IST
|
Murugesan M
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், 10 நாட்களாக முறையாகக் குடிநீர் வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மதுரை - அலங்காநல்லூர் பிரதான சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement