செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

02:15 PM Jan 03, 2025 IST | Murugesan M

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய இடங்களில்  தை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான  ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும்  நடைபெறுகிறது.

Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக இன்று முகூர்த்தக்கால் இதனையடுத்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன்னிலையில்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான  முகூர்த்தக்கால் நடப்பட்டது.

மேலும்  கால்நடை பராமரிப்பு சார்பாக தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. தொடர்ந்து விழா மேடை , குடிநீர் மேடை , இருபுறமும் பார்வையாளர்களை தடுக்கும் வேலி உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMAINAvaniyapuramPalameduthai pongalMukurthakkal functionAlanganallur Jallikattu
Advertisement
Next Article