அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மீண்டும் சர்ச்சை!
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், ஒரே வீரர் இரண்டு போட்டியில் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
Advertisement
மதுரையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர்.
இந்த போட்டியில் மூன்றாம் சுற்றில் 126 பனியன் அணிந்து கார்த்தி என்பவர் விளையாடி வருகிறார். இவர் ஏற்கனவே மதுரை அவனியாபுரத்தில் 15-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றார்.
மதுரையில் நடைபெறும் மூன்று ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாடு பிடிவீரர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றிய பிறகு மீண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.