அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - அயர்லாந்து மாடுபிடி வீரர் தகுதி நீக்கம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி கொன்லன் என்பவர் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். இவர் பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்ததால் ஆர்வம் ஏற்பட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரராக ஆன்லைன் மூலம் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், களத்திற்கு செல்வதற்கு முன்பு நடந்த மருத்துவ பரிசோதனையில் அவருக்கு 53 வயது என்பது தெரியவந்தது. இதையடுத்து வயது மூப்பை காரணம் காட்டி, அவரை ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் மருத்துவ துறையினர் தகுதி நீக்கம் செய்தனர்.
இதனால் அவர் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.