அலுவலகம் சென்று பணியாற்றினால் மன உளைச்சல் குறைவு - ஆய்வில் தகவல்!
வீட்டில் இருந்து பணியாற்றுவதை விட, அலுவலகம் சென்று பணியாற்றினால் மன உளைச்சல் குறைவு என உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மனம் தொடர்பான ஆராய்ச்சி அமைப்பால் பணி மற்றும் மனநிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 65 நாடுகளை சேர்ந்த 54 ஆயிரத்து 831 பணியாளர்களின் தகவல்களை சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளியாயின
அதாவது, தினமும் அலுவலகத்துக்கு சென்று சக ஊழியர்களுடன் நட்புறவு கொண்டு பணி செய்யும்போது மன உளைச்சல் குறைவது தெரியவந்துள்ளது.ஆனால், வீட்டில் இருந்து பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் மன உளைச்சலும் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தனிமையில் இருந்து வெகு நேரம் ஒரே பணியை செய்வது மனநலம் சம்மந்தமான பிரச்சினைகளை உருவாக்கி மன அழுத்தத்தை ஏற்படுத்துவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.