செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடி மாடு என தவறுதலாக அறிவிப்பு? - மாவட்ட ஆட்சியரிடம் உரிமையாளர் புகார்!

07:02 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், முத்துக்காளை பிடி மாடு என தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் பணத்தை திரும்பி கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாட்டின் உரிமையாளர் மனு அளித்துள்ளார்.

Advertisement

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுக்கா உட்பட்ட ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவரது காளை முத்துக்காளை கடந்த பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறக்கப்பட்டது.

இந்த காளையை மாடுபிடி வீரர் அடக்கியதாக அறிவிக்கப்பட்டு, 1 லட்சம் பணமும் மாட்டை பிடித்த வீரருக்கு வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், காளையின் திமிலை பிடித்தப்படி மாடுபிடி வீரர் குறிப்பிட்ட தூரத்திற்கு செல்லாத நிலையில், தொகுப்பாளர் தவறுதலாக மாடு பிடித்தாக கூறியுள்ளதாக வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்து உரிய விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தார்.

Advertisement
Tags :
Avaniyapuram jallikaatubull caught issuebull fightersbullsjallikattu competitionMAINPongal festival
Advertisement