செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - நாளை முதல் ஆன் - லைன் முன்பதிவு தொடக்கம்!

02:59 PM Jan 05, 2025 IST | Murugesan M

மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

Advertisement

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 14ஆம் தேதியும்,  பாலமேட்டில் 15ஆம் தேதியும் ,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும் நடைபெறவுள்ளது

இந்த 3 ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 6 ஆம் தேதி மாலை 05.00 முதல்  7ஆம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய  வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில்  பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Alanganallur JallikattuAvaniyapuram jallikaatuFEATUREDMAINonline bookingPalamedu jallikaatu
Advertisement
Next Article