அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் : ஷிண்டே
07:49 PM Mar 18, 2025 IST
|
Murugesan M
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசுபவர்கள் "துரோகிகள்" என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார்.
Advertisement
மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தின. எல்லோரும் விரும்புவதை சட்டப்படி செய்வோம் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்த பிரச்சனை பூதாகாரம் ஆன நிலையில் நாக்பூரில் கலவரம் வெடித்தது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement