செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அ.வள்ளாலப்பட்டி பொதுமக்கள் சார்பில் இன்று பாராட்டு விழா - கிஷன் ரெட்டி, அண்ணாமலை பங்கேற்பு!

09:44 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

டங்ஸ்டன் திட்டம் ரத்துக்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அ.வள்ளாலப்பட்டியில் பொதுமக்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பொதுமக்களின் போராட்டத்துக்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

மேலும், மேலூர் பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்று மத்திய கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை கைவிடக் கோரி வலியுறுத்தினர்.

Advertisement

இதையடுத்து மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சுரங்க திட்டத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோருக்கு அ.வள்ளாலப்பட்டி மக்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இதற்கிடையே பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

Advertisement
Tags :
A.VallalapattiBJP State President AnnamalaiFEATUREDfelicitation ceremonyMAINMinister Kishan Reddytungsten project cancelled
Advertisement