செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தாம்பரம் : ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக புகார்!

02:12 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

பெருங்களத்தூர் மண்டலம் 58-வது வார்டு கிருஷ்ணா சாலையில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடைக்குள் மழைநீர் கால்வாய் கட்டுப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

திமுக பகுதி செயலாளர் சேகர் என்பவரின் நெருங்கிய நண்பர்கள் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள 3 கடைகளை அகற்றாமல் பாரபட்சத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடைகளுக்குள் அகலம் குறைத்து கால்வாய் கட்டப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் மழைநீர் செல்லாமல் துர்நாற்றம் வீசக்கூடும் என்றும், இதனால் நோய்ப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement
Tags :
Complaints that a stormwater canal is being constructed without removing encroachmentsFEATUREDMAINதாம்பரம் மாநகராட்சிமழைநீர் கால்வாய்
Advertisement