ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற முதியவர்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த செங்குளம் கண்மாய் அருகே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 7 குடும்பத்தினர் பட்டா இன்றி வசித்து வந்தனர். வீடுகளை காலி செய்யக்கூறி 7 குடும்பங்களுக்கும் பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் வீடுகளை காலி செய்யாமல் மக்கள் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்பகுதியில் குவிந்தனர்.
இதையத்து ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், வீடுகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் அளித்தனர்.