ஆங்கில புத்தாண்டு 2025 - துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்!
நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரில் ஆங்கிலப் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
கிழக்கு பசிபிக் நாடான நியூசிலாந்தில் இந்திய நேரப்படி 4.30 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. தொடர்ந்து ஆக்லேண்ட் நகரில் உள்ள உயரமான கட்டடமான ஸ்கை டவரில் கண்கவர் வாண வேடிக்கைகளை மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். மேலும் 2025 புத்தாண்டை நியூசிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆஸ்திரேலியாவில் பிறந்த புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கண்கவர் வான வேடிக்கையுடன் புத்தாண்டை மக்கள் கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
துபாயில் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். உலகம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. துபாயில் கண்கவர் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
சிங்கப்பூரில் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கண்கவர் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் இசை கச்சேரிகளுடன் ஆடி, பாடி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர வாழ்த்துகளை தெரிவித்து உற்சாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.