செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆசிரியர் எங்கள் வாயில் டேப் ஒட்டவில்லை! : மாணவி பேசும் வீடியோ

03:35 PM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தஞ்சாவூரில் மாணவர்களின் வாயில் ஆசிரியர் டேப் ஒட்டியதாக புகார் எழுந்த நிலையில், ஆசிரியர் தங்கள் வாயில் டேப் ஒட்டவில்லை என மாணவி ஒருவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் நிதிஷ், கவின், ரோஷன், சுஷ்மிதா, கனிஷ் வர்மா ஆகிய மாணவர்கள் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்ததாக புகார் எழுந்தது.

Advertisement

இதையடுத்து தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் தலைமையில் அந்த பள்ளியில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், தலைமை ஆசிரியர் தங்கள் வாயில் டேப் ஒட்டவில்லை என்றும், மற்றொரு மாணவன் தான் டேப் ஒட்டினான் எனவும் சுஷ்மிதா என்ற மாணவி கூறியுள்ளார்.

Advertisement
Tags :
MAINThe teacher didn't tape our mouths! : Video of student speaking
Advertisement