செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆஞ்சநேயர் கோயிலில் பணபல்லாக்கு செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

05:39 PM Apr 12, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கர்நாடக மாநிலம், தாவணகெரே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பணபல்லாக்கு செய்து பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

Advertisement

கொக்கனூர் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேய உற்சவம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கோயிலில் இருந்து பல்லக்குகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ஆஞ்சநேயர், பீரதேவரு, துர்காம்பா, மாதங்கியம்மா தேவி ஆகிய சுவாமிகளுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கினர்.

Advertisement

10, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் மாலையும் அணிவித்தனர். மொத்தம் 4 சாமிகளுக்கும் 15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டு தேர் மற்றும் மாலைகளைப் பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
Tags :
Devotees make offerings at Anjaneya templeMAINpay homage!க்தர்கள் நேர்த்திக்கடன்
Advertisement