ஆடு திருட வந்தவர் என நினைத்து விரட்டிய மக்கள் - அச்சத்தில் 250 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி அமர்ந்த நபரால் பரபரப்பு !
04:32 PM Nov 21, 2024 IST | Murugesan M
சேலம் அருகே 250 அடி உயர மின்கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்ட நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தலைவாசல் அடுத்துள்ள புனல்வாசல் பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை அப்பகுதி மக்கள் துரத்தியுள்ளனர். இதில், பயந்துபோன அவர், அருகே இருந்த 250 அடி உயர மின்கம்பதத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, கீழே இறங்கிவர மறுத்துள்ளார்.
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அவரிடம் நைசாக பேசி கீழே இறங்கினர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் கருப்பையா என்றும், ஆடு திருட வந்த நபர் என நினைத்து மக்கள் துரத்தியதால் பயந்துபோய் மின்கம்பத்தில் ஏறியது தெரிய வந்தது.
Advertisement
Advertisement