ஆண்டுக்கு 1000 பேரை சேர்க்க ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
01:55 PM Jan 01, 2025 IST
|
Murugesan M
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆண்டுக்கு ஆயிரம் பேரை சேர்க்க இலக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சஹ்ரான் ஹாசிம் என்ற பயங்கரவாதி துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி வழங்கியதும், சென்னை மண்ணடி, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பயிற்சி மேற்கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
மேலும், ஐஎஸ் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் ஆண்டுக்கு ஆயிரம் பேரை அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், கோவை ஈஸ்வரன் கோயிலை தகர்க்க இவர்கள் திட்டமிட்டு அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Next Article