ஆண்டு இறுதி தேர்வு எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்கள் : வீட்டிற்கே சென்று அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த தலைமை ஆசிரியர்!
05:04 PM Apr 09, 2025 IST
|
Murugesan M
புதுக்கோட்டை அருகே ஆண்டு இறுதி தேர்வை எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தேர்வெழுத வைத்த தலைமை ஆசிரியரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Advertisement
ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் சகோதரர்களான இரண்டு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை எழுத வராமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
இதை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசைராஜ் மாணவர்களை அழைத்து வர அவர்களது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தலைமை ஆசிரியரைப் பார்த்த மாணவர்கள் இருவரும் ஓடி ஒளிந்துள்ளனர்.
Advertisement
தொடர்ந்து ஓடி ஒளிந்த மாணவர்களைத் தேடிப் பிடித்த தலைமை ஆசிரியர் தனது இருசக்கர வாகனத்திலேயே அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்தார். தலைமை ஆசிரியரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Advertisement