ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச தடை செய்யக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச யாரும் தடை செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவ, மாணவிகள் யாருடன் பேச வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.
முதல் தகவல் அறிக்கையில் மாணவியைக் களங்கப்படுத்தும் நோக்கில் ஆண் நண்பருடன் இருந்ததாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது மற்றும் கண்ணிய குறைவானது எனவும் கண்டனம் தெரிவித்தனர்.
காதல் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்; சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மாணவி சென்றிருக்க கூடாது என்று பேசக்கூடாது எனவும், மாணவிகள் ஆண் நண்பர்கள் உடனோ காதலருடனே பேச யாரும் தடை செய்யக்கூடாது எனவும் குறிப்பிட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியல் விசாரணை குழுவிடம் எத்தனை புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவர்களுடன் மாணவிகள் பேசக் கூடாது என்பதை எல்லாம் பல்கலைக்கழகம் தெரிவிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர்.