செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை? திருமாவளவன் விளக்கம்!

09:49 AM Dec 08, 2024 IST | Murugesan M

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என திமுகவின் பெயரை குறிப்பிடாமல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னை விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் திருமாவளவன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என தெரிவித்தார் . கட்சி நிர்வாகிகளிடம் மேலும் ஆலோசனை மேற்கொண்டு  முடிவெடுக்கப்படும் என்றும் திருமாவளவன் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Aadhav ArjunaDMKMAINthirumavalavanvckVijay
Advertisement
Next Article