ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞர்!
05:51 PM Jan 01, 2025 IST
|
Murugesan M
ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் சிங்கிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மது அருந்துவதற்காக தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தரமறுத்த நிலையில், ஏற்கனவே மதுபோதையில் இருந்த இளைஞர், அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறத் தொடங்கினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து அந்த இளைஞர் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு பணம் கேட்டு அடம்பிடித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Advertisement
Advertisement
Next Article