ஆந்திராவை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிசிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.