ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் இளம்பெண் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குர்ரம் கொண்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்தபோது கணேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. கல்லூரி முடிந்த பின்னர் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
இதை அறிந்த கணேஷ், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர், சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள், இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.