'ஆபரேஷன் கருடா' - ஆந்திர மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை!
11:18 AM Mar 22, 2025 IST
|
Ramamoorthy S
ஆந்திரா மாநிலம் முழுவதும் 'ஆபரேஷன் கருடா' என்ற பெயரில் மருந்துக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement
விசாகப்பட்டினம், நெல்லூர், அனந்தபூர், கடப்பா, ஓங்கோல் மற்றும் விஜயவாடா போன்ற பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தினார்கள்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்கப்படும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளுடன், காலாவதியான மாத்திரைகளும் ஆய்வு செய்யப்பட்டன. சட்ட விரோதமாக மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும், உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement