For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள், வாட்ச், ஏர்பட்ஸ் அறிமுகம் - சிறப்பம்சம் என்ன?

08:00 PM Sep 14, 2024 IST | Murugesan M
ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள்  வாட்ச்  ஏர்பட்ஸ் அறிமுகம்    சிறப்பம்சம் என்ன

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் உட்பட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, புதிய ஏர்பட்ஸ் 4, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கலிபோர்னியா மாகாணத்தில் குபர்ட்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இட்ஸ் க்ளோ டைம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

Advertisement

ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவையும் அறிமுகப்படுத்தப் பட்டது.

கடந்த ஆண்டு ஐபோன் 15 வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 வெளியிடப்பட்டுள்ளது. iPhone 15 Pro மற்றும் Pro Max வகை ஐபோன்களுக்கு மட்டுமே முன்னர் கிடைத்த சிறப்பு அம்சங்கள்,இப்போது அடிப்படை iPhone 16 போன்களில் கிடைக்கிறது.

Advertisement

இரண்டு மாடல்களும் வலுவான பின்புற கண்ணாடி, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மற்றும் ஆப்பிளின் அடுத்த தலைமுறை செராமிக் ஷீல்ட் ஆகியவற்றை கொண்டுள்ளன. இது மற்ற ஸ்மார்ட்போனில் உள்ள கண்ணாடியை விட 2 மடங்கு கடினமானதாக உள்ளது.

அடிப்படை iPhone 15 மற்றும் iPhone 15 Plus இல் உள்ள கேமராக்களுக்குப் பதிலாக, iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆகியவை செங்குத்தாக சீரமைக்கப்பட்ட கேமராக்களுடன் வந்திருக்கிறது. 48MP மெயின் மற்றும் 12MP அல்ட்ராவைட் லென்ஸ் உடன் இந்த ஐ போன்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இது விஷன் ப்ரோவுக்கான இடஞ்சார்ந்த வீடியோக்களை எடுக்க உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் புதிய A18 பயோனிக் சிப் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் உருவாக்கப்பட்டிருக்கிறது . ஐபோன் 16 போன் 6.1 இன்ச் திரையை கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஐபோன் 16 பிளஸ் சற்று பெரிய 6.7 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. இதில் iPhone 16 3561mAh பேட்டரி உடனும் மற்றும் iPhone 16 Plus 4006mAh பேட்டரியுடன் வந்திருக்கிறது.

இரண்டு ஃபோன்களிலும் பின்புறம் இரண்டு கேமராக்கள் இருக்கும், அதில் மீண்டும் 48MP மெயின் மற்றும் 12MP அல்ட்ராவைட் லென்ஸ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேம்பட்ட கேமரா கன்ட்ரோல்,மற்றும் சக்திவாய்ந்த A18 சிப் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. புகைப்படம் எடுத்தல் மற்றும் அன்றாட பணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன்,பயன்படுத்துவோருக்கு புதிய அனுபவத்தைத் தருவதாக உள்ளது.

ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் 6.3 இன்ச் ஸ்க்ரீனுடன் வந்துள்ளன. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சற்று பெரிய 6.9 இன்ச் திரையுடன் வந்துள்ளன. இந்த இரண்டு மாடல்களும் A18 Pro சிப்பில் இயங்குகின்றன. ஐபோன் 16 ப்ரோவில் 3355எம்ஏஎச் பேட்டரியும் ப்ரோ மேக்ஸ் ஐ போனில் 467Mah பேட்டரியும் உள்ளன. இரண்டு ப்ரோ ஐ போனிலும், 48MP பிரதான கேமரா, 5x ஜூம் கொண்ட 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 48MP அல்ட்ராவைடு சென்சார் என மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன.

ஐபோன் 16 இந்திய மதிப்பில் 79,900 ரூபாய்க்கும் ஐபோன் 16 பிளஸ் 89,900 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்திருக்கிறது. இரண்டு மாடல்களும் ஐந்து வண்ணங்களில் 128ஜிபி முதல் 512ஜிபி வரை சேமிப்பு திறன்களுடன் கிடைக்கிறது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் உட்பட 58 க்கும் மேற்பட்ட நாடுகளில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும் என்றும், செப்டம்பர் 13 ஆம் தேதியில் இருந்து முன்பதிவுகள் தொடங்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபோன் 16 மாடல்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமான மறுசுழற்சி செய்யப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஐ போன்கள் 85 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் செய்யப் பட்டுள்ளன.

மேலும் இந்த ஐ போன்களின் பேட்டரி 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட கோபால்ட்டைக் கொண்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் இதில் பயன்படுத்தப்படும் 95 சதவீத லித்தியம் மறுசுழற்சி செய்யப்படுகிறது, ஆப்பிள் சாதனங்களில் இது இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

பேக்கேஜிங் முற்றிலும் ஃபைபர் அடிப்படையிலானது, இது 2025 க்குள் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக நீக்குவது என்று ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனம்
அறிவித்திருந்தது. அந்த வகையில் இந்த ஐபோன்களின் பேக்கேஜிங் முற்றிலும் ஃபைபரால் செய்யபப்ட்டிருக்கிறது.

Advertisement
Tags :
Advertisement