செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆப்பு வைக்கும் ஆன்லைன் "LOAN APP"கள்!

07:35 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்... ஆன்லைன் கடன் செயலி மூலம் ஏற்படும் சைபர் குற்றங்களையும் , சைபர் கொள்ளையர்களிடமிருந்து நாம் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

இப்போ இருக்க Lifestyle-ல நாம என்னதான் நிறைய சம்பாரிச்சாலும் மாத கடைசியில account zero balance ஆகாம பாதுகாக்குறதே பெரிய விஷயமா இருக்கு... அப்படி செலவுக்கு கையில காசு இல்லாதப்போ நம்மள்ள பலரும் அடுத்து தேடி போற விஷயம்தான் ஆன்லைன் லோன் ஆப்.

இந்த லோன் ஆப்.. எதிர்காலத்துல உங்களுக்கே ஆஆப்பா மாறும் சொன்ன உங்களால நம்பமுடியுதா ? ஆமா, கடந்த வருஷம் மட்டும் தமிழ்நாட்டுல online loan app scam சம்பந்தமா 9873 வழக்கும் , 2025-ஓட கடைசி மூன்று மாதத்துல 3834 கேசும் பதிவாகியிருக்கு.... மக்களோட பணத்தேவைய பூர்த்தி செய்யுறங்க பேருல நடந்துட்டுவர்ர இந்த மிகப்பெரிய ஸ்கேம்ல நீங்களும் சிக்காம இருக்கனும்னா இந்த தொகுப்பை முழுசா பாருங்க..

Advertisement

Primelen , candycash-னு நம்ம ஊருல நூற்றுக்கும் மேற்பட்ட லோன் ஆப்கள் இருக்கு... இதுல 100 ரூபாய்ல இருந்து இரண்டு லட்சம் வரைக்கும் நமக்கு கடன் கொடுக்கப்படுது... ஆனா,  நூறு , ஆயிரம்னு கடன் வாங்குறவங்க பெரிய அளவுல இந்த ஸ்கேம்ல மாட்டுறது கிடையாது... பத்தாயிரத்திற்கும் மேல பெரிய தொகைய கடன் பெற்றவங்கதான் சைபர் கொள்ளையர்கள்கிட்ட அதிக அளவுல சிக்குறாங்க..

playstore-ல இருந்து லோன் ஆப் download செஞ்சு install பண்ணதும்...  நம்மளோட phone contacts , messages , call, whatsapp ஆப்னு எல்லாத்துக்கும் access allow கொடுத்தான், நாம ஆப்குள்ளயே போகமுடியும்... இப்டி கொடுத்ததும் லோன் வாங்குறதுக்கு நம்மளோட Pan card , adhar card details கேப்பாங்க...  நாம கொடுத்த Proof verify பண்ணதும் நாம கேட்ட amount-அ கொடுத்துடுவாங்க...

ஆனா , இந்த amount-அ  நாம திருப்பி செலுத்தவேண்டுடிய due டேட் வரும்போதுதான் அதிகப்படியான வட்டி பணம் கேட்டு அந்த ஆப்ல இருந்து ஒருத்தர் கால் பண்ணி நம்மள மிரட்டுவாங்க... அவங்களோட மிரட்டல கண்டுக்காம நாம அலட்சியப்படுத்துனா... அடுத்த நிமிஷமே நம்மளோட Phone-அ ஹேக் செஞ்சு நம்மளோட போட்டோட தவறானவிதமா மார்பிங் செஞ்சு நம்மளோட சொந்தகாரங்களுக்கு எல்லாம் அனுப்பிருவாங்க..

இப்படிதான் சைபர் கொள்ளையர்கள் காலங்காலமா வலைவிரிச்சு அப்பாவி மக்கள emotional-அ blackmail பண்ணி பணத்தை கொள்ளையடிச்சுட்டு வராங்க... இந்த கொள்ளை கும்பல்கிட்ட நாம மாட்டிகிட்டோம்னா அடுத்து நாம என்ன பண்ணலாங்குற இப்போ பார்க்கலாம்.

ஏஐ நோக்கி நாம வளர்ச்சியடிஞ்சுட்டு வர்ர இதே சூழல்லாதான் நாம நினச்சுகூட பார்க்கமுடியாத அளவுக்கு சைபர் குற்றங்களும் அதிகரிச்சுட்டே வருது... தெளிந்த சிந்தனையும் , தைரியமும் இருந்தாபோதும் சைபர்கொள்ளையர்கள்கிட்ட இருந்து நாம் ஈசியா தப்பிச்சிறலாம்.

Advertisement
Tags :
FEATUREDMAINWedge Online "LOAN APPs"ஆப்பு வைக்கும் ஆன்லைன் LOAN APP
Advertisement