செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆமைகள் உயிரிழப்பு : தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

11:45 AM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமாக கூறப்படும், இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

சென்னை மெரினா முதல் கோவளம் வரை கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய விவகாரத்தில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என கண்டறியப்பட்டதா? என்றும் ஆமைகள் உயிர் இழப்பை தடுப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

Advertisement

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு கடல் பகுதிகளில் மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களின் நடமாட்டத்தில் விதிமீறல் உள்ளதா என கண்காணித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட பசுமை தீர்ப்பாயம், ஆமைகள் உயிரிழப்புக்கு காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்திய கப்பல்களை அரசு கண்டறிந்ததா? என்றும், எத்தனை மீன்பிடிக் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement
Tags :
Death of turtlesFEATUREDMAINSouth Zone Green Tribunal questions the Tamil Nadu governmenttamil nadu newstn govt
Advertisement