ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான பெண் குழந்தை பிறப்பு!
11:15 AM Dec 27, 2024 IST | Murugesan M
அரியலூர் அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
முன்னுரான் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ், பிரசவ வலியால் துடித்த கற்பகத்திற்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
Advertisement
அப்போது செல்லும் வழியில் கற்பகத்திற்கு அதிகப்படியான வலி ஏற்பட்டதால், ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்ததில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறகு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.
Advertisement
Advertisement