செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா!

07:44 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

70 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

Advertisement

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது டெல்லி அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பாலம் தொகுதியைச் சேர்ந்த பாவனா கவுர், மெஹ்ராலி தொகுதியைச் சேர்ந்த நரேஷ் யாதவ், ஜனக்புரி தொகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ரிஷி, கஸ்தூர்பா நகர் தொகுதியைச் சேர்ந்த மதன் லால், திரிலோக்புரி தொகுதியைச் சேர்ந்த ரோஹித் மெஹ்ராலியா, பிஜ்வாசன் தொகுதியைச் சேர்ந்த பி.எஸ். ஜூன், ஆதர்ஷ் நகர் தொகுதியைச் சேர்ந்த பவன் சர்மா ஆகிய 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

கெஜ்ரிவால் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் 7 எம்எல்ஏக்களும் கட்சியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Tags :
7 Aam Aadmi Party MLAs resigned!Aam Aadmi leadersaam aadmi partyMAINஆம் ஆத்மி கட்சி
Advertisement