ஆய்வுக்கு அழைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது கணக்கு குழு உறுப்பினர்!
12:41 PM Jan 24, 2025 IST
|
Sivasubramanian P
காரைக்குடியில் ஆய்வுக்கு அழைக்காத மாவட்ட ஆட்சியரிடம் பொது கணக்கு குழு உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Advertisement
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்ய சென்றனர். காரைக்குடியில் உள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தில் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஆய்வுக்கு தன்னை ஏன் அழைக்கவில்லை எனக்கேட்டு பொது கணக்கு குழு உறுப்பினரான எழிலரசன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை சாமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளே அழைத்து சென்றார் .
Advertisement
Advertisement
Next Article