செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பால சாலை!

11:04 AM Dec 16, 2024 IST | Murugesan M

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கால் தரைப்பால சாலை மூழ்கிய நிலையில், போக்குவரத்து பாதிப்பால் அவதிப்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர் தேக்கத்தில் இருந்து 5,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆண்டார் மடம் - பழவேற்காடு செல்லும் தரைப்பால சாலையானது தண்ணீரில் மூழ்கியது.

தற்போது பொதுமக்கள் படகில் பயணம் செய்து அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உள்ளிட்டோரிடம் தரைப்பால சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Arani River Flood Submerged Bridge Road!floodMAIN
Advertisement
Next Article