செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் 2-ஆம் நிலை பயிற்சி முகாம்!

11:38 AM Nov 19, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் இரண்டாம் நிலை பயிற்சி முகாம் நாக்பூரில் தொடங்கியது.

Advertisement

நாக்பூர் ரேஷிம்பாக் பகுதியில் உள்ள மஹரிஷி வியாஸ் கலையரங்கில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட 868 பேர் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் 12-ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

முதல் நாள் அமர்வில் பயிற்சி முகாம் சேவை இணைத் தலைவர் கிருஷ்ண கோபால்ஜி, பயிற்சி பாதுகாவலர் ராஜ்குமார் மதாலே மற்றும் ஜோத்பூர் மண்டல அமைப்பாளர் ஹர்தியாள் வெர்மாஜி ஆகியோர் பங்கேற்று பாரத மாதா உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement

முகாமில், சமூக விழிப்புணர்வு மற்றும் மாற்றம் தொடர்பாக பயிற்சியளிக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி நூறு ஆண்டுகளான நிலையில், நெருக்கடி நிலையின்போதும், கொரோனா காலத்திலும் மட்டுமே பயிற்சி முகாம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
2nd Level Training Camp of RSS Volunteers!FEATUREDMAINRSS
Advertisement