செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய முதலைகள் - பொதுமக்கள் அச்சம்!

10:13 AM Mar 19, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை முதலைகள் தாக்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement

காட்டுமன்னார் கோயில் அருகே குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவரை முதலைகள் தாக்கியதில் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கை, கால்களில் பலத்த காயம் அடைந்த முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள், உயிர் பலி ஏற்படுவதற்கு முன் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
CuddaloreKattumannar kovilKollidam riverKunjameduMAINman attacked by crocodiles.
Advertisement