ஆலங்குளத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பெண் பலி!
11:24 AM Apr 02, 2025 IST
|
Ramamoorthy S
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
Advertisement
சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகுன் என்பவர், தனது மனைவி மற்றும் 10 மாத கை குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவரது மனைவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மனைவியின் உடலை கட்டியணைத்து கணவர் பாலமுருகன் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
Advertisement
Advertisement