செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆளுநர், எதிர்கட்சிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறை - அண்ணாமலை குற்றச்சாட்டு!

01:16 PM Jan 07, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஆளுநர் மற்றும் எதிர்கட்சிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால் மாண்புமிகு ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு திமுக பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, காவல்துறை, சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

திமுக ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்? என அண்ணாமலை தெரிவித்துள்ளளார்.

Advertisement
Tags :
annamalaidmk postersdmk protestFEATUREDgovernor rn raviMAINtamilnadu bjp presidenttamilnadu pollice
Advertisement