ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு!
ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாமக அனுமதி கோரியபோது, 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக்கூறி காவல்துறை அனுமதி மறுத்தது.
ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுகவுக்கு போராட்டம் நடத்த ஒரே நாளில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தரப்பில் முறையிடப்பட்டது.
விதிகளை மீறி போராட்டம் நடத்தும் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என பாமக வழக்கறிஞர் பாலு கோரிக்கை விடுத்தார்.
இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன், இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் பாமக தரப்பில் வலியுறுத்தப்பட்டது
அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி, மனுத்தாக்கல் செய்து எண்ணிடப்படும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தார்.