ஆளுநர் உரையை வாசிக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தன - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையை வாசிக்கவிடாமல் தடுத்ததாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்ட நிலையில் தமிழக அரசு இதை கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் விதிகளுக்கு உட்பட்டு விடுதி நடைபெறுகிறதா? குற்றவாளி எப்படி உள்ளே வந்தார் காவலாளி யாரும் இல்லையா? எனவும் இவையெல்லாவற்றையும் வைத்து பார்த்தால் இது திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை போலதான் தோன்றுகிறது எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது எனக் குற்றம்சாட்டியவர்,
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது பாஜகவின் கருத்து எனத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு தான் நடத்துகிறது. இரவு நேரங்களில் அண்ணா பல்கலைக்கழகங்களில் மின்விளக்குகள் இல்லை, சிசிடிவி கேமரா இல்லை, இதை ஆளுநரா வந்து போடுவார்? என கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசிற்கு சிபிசிஐடி மேல் நம்பிக்கை உள்ளது போல் எங்களுக்கு சிபிஐ மேல் நம்பிக்கை உள்ளது. சட்டபேரவையில் ஆளுநர் தேசிய கீதம் பாட வேண்டும் என கூறிய போது மற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சூழந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையை வாசிக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்தார்.