செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

11:03 AM Nov 29, 2024 IST | Murugesan M

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த
3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என முன்னதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது முடிவை மாற்றிக்கொண்டுள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகும் என அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல், 12 மணி நேரத்தில் வலுவடையும் எனவும், காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

ஃபெங்கல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
chennai metrological centerFEATUREDheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningtamilnadu rainweather update
Advertisement
Next Article