ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - நாளை கரையை கடக்கும் என அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
Advertisement
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என முன்னதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஃபெங்கல் புயல், 12 மணி நேரத்தில் வலுவடையும் எனவும், காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது