ஆஸ்திரேலியாவில் அதிக மார்ஜின் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வெளிநாடுகளில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
Advertisement
அதன்படி 2007ஆம் ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, மிர்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணத்தின்போது, பல்லேகேலேவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2023ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது, இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேபோல், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியை, கடந்த பிப்ரவரி மாதம் ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில், 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச மார்ஜின் வெற்றியாகும்.
அதே சமயம் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணியை, வான்கடே மைதானத்தில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
அதே போல 2015ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியை டெல்லியில் 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை - முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
240 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கூட, வெளி நாடுகளில் இந்திய அணி பெறும் அதிகபட்ச மார்ஜின் வெற்றியாக பார்க்கப்படும் என்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.