செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - 150 ரன்களில் சுருண்ட இந்தியா!

04:00 PM Nov 22, 2024 IST | Murugesan M

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

Advertisement

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி PERTH மைதானத்தில் காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

Advertisement

ஒருபுறம் நிதிஷ் குமார் ரெட்டி மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில், மற்றொரு புறம் இந்திய வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்கள் அடித்த நிலையில், ஆஸ்திரேலியா சார்பில் ஜாஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement
Tags :
Australian bowlingaustriliaIndiaindia aus Test matchMAINperth
Advertisement
Next Article