செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் - இந்தியா தடுமாற்றம்!

03:02 PM Dec 27, 2024 IST | Murugesan M

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

Advertisement

மெல்போர்னில் ஆஸ்திரேலியா இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்-இன் அபார சதத்தால் 474 ரன்கள் குவித்தது.

இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையை கட்டினார். ஒரு புறம் யஷஸ்வி ஜெயஸ்வால் மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில், மற்றொருபுறம் விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட வீரர்கள் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடித்துள்ள இந்திய அணி, 310 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
310 runs behind.AustraliaIndiaindia Australia 4th test.MAINMelbourne.STEVE SMITHYashasvi Jaiswal
Advertisement
Next Article