For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்ற கிராம மக்கள்!

10:20 AM Dec 16, 2024 IST | Murugesan M
இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்ற கிராம மக்கள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சாலை வசதி இல்லாததால் ஓடையில் இடுப்பளவு தண்ணீரில் கிராம மக்கள் உடலை சுமந்து சென்றனர்.

குலமங்கலம் கிராமத்தை சேர்ந்த தனத்தம்மாள், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பாப்பான் ஓடை வழியாகத்தான் மயானத்திற்கு உடலை எடுத்து செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertisement

இதன் காரணமாக, இடுப்பளவு தண்ணீரில் தனத்தம்மாளின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாலை வசதி அமைத்துதர கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement