இணைப்பு சுற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தி 12 கிராம மக்கள் மனு!
11:04 AM Jan 21, 2025 IST
|
Murugesan M
மயிலாடுதுறை சிங்கனோடை கிராமத்தின் வழியாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சுற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தி 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Advertisement
சீர்காழி முதல் நாகை வரையில் என்.எச்.45 நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருக்கடையூர் ஊராட்சி மேலசிங்கனோடை கிராமத்தில் இணைப்பு சுற்றுப்பாதை இல்லாததால் 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது தொடர்பாக அண்மையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
Advertisement
Advertisement
Next Article