For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல! : ஆளுநர் மாளிகை

05:22 PM Jan 06, 2025 IST | Murugesan M
இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல     ஆளுநர் மாளிகை

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள், பேரவையில் என்ன செய்கிறார்கள் என்பதை தமிழர்கள் அறிய முடியாத சூழல் நிலவுகிறது என்று தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது.

மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.

Advertisement

அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது.

இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement