இந்தியர்களுக்கு பெருமையையும், வெற்றியும் தேடி தந்தவர் குகேஷ் - ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!
05:17 PM Dec 19, 2024 IST | Murugesan M
140 கோடி இந்தியர்களுக்கு பெருமையையும் ,வெற்றியும் தேடி தந்தவர் குகேஷ் என ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தனது பெற்றோருடன் கலந்து கொண்டார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி குகேஷுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
Advertisement
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், 140 கோடி இந்தியர்களுக்கு பெருமையையும், வெற்றியும் தேடி தந்தவர் குகேஷ் என பெருமிதம் தெரிவித்தார். மேலும் குகேஷின் வெற்றியால், நாடு பெருமை கொள்கிறது என்றும், இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக குகேஷ் உள்ளார் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement