இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
10:58 AM Feb 20, 2025 IST
|
Ramamoorthy S
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Advertisement
அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இதில் இரு மாநில பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், காலனிய ஆட்சியில் மாநிலங்கள் என்பது இல்லை என்றும், மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நகரும்போது போக்குவரத்து வசதி கூட பெரிதாக இல்லை எனவும் கூறினார்.
Advertisement
மேலும் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடுகளும் இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
Advertisement