For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியாவின் மற்றொரு அசத்தல் : பாகிஸ்தானை பயமுறுத்தும் LRLACM ஏவுகணை - சிறப்பு கட்டுரை!

09:00 PM Nov 18, 2024 IST | Murugesan M
இந்தியாவின் மற்றொரு அசத்தல்   பாகிஸ்தானை பயமுறுத்தும் lrlacm ஏவுகணை   சிறப்பு கட்டுரை

நீண்ட தூரம் பயணித்து நிலத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. LRLACM என்னும் அந்த ஏவுகணை பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக இருக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள்.

தீப்பிழம்பை கக்கியபடி சிறுத்தையைப் போல் சீறிப்பாயும் இந்த ஏவுகணைதான் இந்தியாவின் சமீபத்திய சாதனை. DRDO எனப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே ஏவுகணை உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை தயாரித்து வருகிறது.

Advertisement

அந்த வகையில் LRLACM என்னும் புதிய ஏவுகணையை தயாரித்திருக்கிறது. LONG RANGE LAND ATTACK CRUISE MISSILE என்பதன் சுருக்கமே LRLACM. நிலத்தில் இருந்தும் நீரில் இருந்தும் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று நிலத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.

ஒரு டன் எடை கொண்ட LRLACM-ஐ பெங்களூருவில் உள்ள AERONAUTICAL DEVELOPMENT ESTABLISHMENT, BHARAT ELECTRONICS LIMITED மற்றும் ஹைதராபாத்தில் உள்ள BHARAT DYNAMICS LIMITED ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து DRDO தயாரித்துள்ளது.

Advertisement

ஒடிஷாவில் நடைபெற்ற சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது LRLACM ஏவுகணை. திட்டமிடப்பட்ட பாதையில் சரியாக பயணித்து தமது பணியை நிறைவேற்றியது. பல்வேறு உயரங்களிலும் வேகத்திலும் பறக்கும் திறன்பெற்ற LRLACM நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணையை DRDO பரிசோதிப்பது இதுவே முதன்முறை.

அதற்காக அறிவியலாளர்களுக்கும் ராணுவத்துக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், LRLACM-ன் வெற்றி புதிய ராணுவ தளவாட தயாரிப்பை ஊக்கப்படுத்தும் எனக்கூறியுள்ளார்.

ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சீறிப்பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்திருப்பது அண்டை நாடாக இருந்துகொண்டு அவ்வப்போது தொல்லை கொடுக்கும் பாகிஸ்தானுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியிருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருநாடு வல்லரசாக வேண்டும் என்றால் உற்பத்தியிலும் பொருளாதாரத்திலும் ராணுவ வலிமையிலும் தன்னிறைவு பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், "உலக அரங்கில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வல்லரசாவதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதால் இந்தியாவை வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்றார். அவரது கூற்றுக்கு வலுச்சேர்த்திருக்கிறது LRLACM ஏவுகணை.

Advertisement
Tags :
Advertisement