இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் - ஆஸ்திரேலியா 311/6 ரன்கள் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்துள்ளது.
Advertisement
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது,
இதையடுத்து களமறிங்கிய அந்த அணியின் 19 வயது தொடக்க பேடஸ்மேன் SAM KONSTAS, அதிரடியாக விளையாடி 65 ரன்கள் குவித்தார். மேலும், USMAN KHAWAJA, MARNUS LABUSHANE ஆகிய வீரர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். இந்த நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 311 ரன்களை குவித்துள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலிய வீரருடன் மோதலில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.